Tuesday, 18 March 2014

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!


Natural remedies for bile reflux - Food Habits and Nutrition Guide in Tamil
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...
* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

தோல் நோய் குணமாக...


Home Remedies for Skin Disorders - Food Habits and Nutrition Guide in Tamil
வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.
கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.
வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...
எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.
வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்

நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்
அகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்
அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி
அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி
அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்
ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி
ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்
இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்
எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்
ஓமம் - கண்நோய், கபம், விக்கல்
கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு
கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி
கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி
கருவேப்பிலை - இரத்த பித்தம்
கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்
கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்
குங்குலியம் – பாண்டு நோய், காதுவலி
கொடிவேலி - கிரஹணி, வீக்கம்
கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு
சதகுப்பை - இருமல், யோனி நோய்கள்
சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி
தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.
திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை
தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்
நன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்
நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி
நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்
நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு
பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்
பூண்டு - இதய நோய், இருமல்
பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்
பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்
பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி
மணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்
மிளகு - வயிற்று உப்புசம், பல்வலி
முள்ளங்கி – காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்
வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்
வல்லாரை – சோகை, நீரழிவு, வீக்கம்
வாகை - வீக்கம், அக்கி, இருமல்
வால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு
வில்வம் - வாதம், கபம்
விளாமிச்சம் வேர் – நாவறட்சி, எரிச்சல்
வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு


ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்

Friday, 8 November 2013

ஓரிதழ் தாமரை




உடல் வலுப்பெற-ஓரிதழ் தாமரை


Farhat's Heaven on Earth growth us as herbs, sages, rishis, the nature of their use of the Tau special these herbs helps to find out how did the human race.Hybanthus enneaspermus at Talakona forest, in Chittoor District of Andhra Pradesh, India.
மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.
இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.
நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. .
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.
இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.
இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.
உடல் வலுப்பெற
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின்பலனை அனுபவிக்க முடியும்.
சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.
இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும். மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.
உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.
இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
சிறுநீர் மருத்துவம்
சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்-1
முதல் படி: சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்
சிறுநீர் சிகிச்சையை முதன்மைப்படுத்தும் ஒரு அறிவியல் வலைப்பூ. சித்தர்கள் முதல் நிறைய சான்றோர்கள் ஆதரித்த முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம் அல்லது சிறுநீர் மருத்துவத்தின் மேன்மைகளைப் பரப்ப இவ்வலைப்பூ முயலும்.
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டுரை:
RMR.இராஜசேகரன்
காரைக்குடி
சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்
ஆரோக்கியத்திற்கான அடிப்படை:
இன்றைய உலகில் மனித சமுதாயம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக வசதியான வாழ்க்கை பெறமுடிகிறது. ஆனால் மனத்தளவில் நிறைவோ, அமைதியோ அல்லது உடலளவில் ஆரோக்கியமோ இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. நவீன மருத்துவம் வளர்ந்துள்ள இந்நாளில் ஏன் நோய்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது; மருத்டுவனமனைகளின் எண்ணிக்கையும், மருந்துக்கடைகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே போகிறது. மேலும் இன்று நாட்பட்ட நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாதோ என்ற நிலை உள்ளது. இதை நவீன மருத்துவமும் மறுப்பதாக இல்லை. நவீன மருந்துகளின் பக்கவிளைவுகளையும், பின்விளைவுகளையும் யாரும் மறுப்பதற்கில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நோய்களைக் குணப்படுத்த வேண்டிய மருந்துகள், புதிய தீராத நோய்களுக்கு வழிகோலுவதுதான். அடுத்து நோய்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துகொண்டே போவதுதான். மனதைச் செம்மையாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வழிகாட்ட பலவேறு யோகா மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள் தோன்றிக்கொண்டே இருந்தபோதும், பெரிதாக பலன் கிட்டியிருப்பதுபோல் தோன்றவில்லை.
எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தபோதும், மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அமையும்? அப்படியெனில் இதற்கு வேறு வழியே இல்லையா?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண இக்கட்டுரை முயல்கிறது.
நமது ஆய்வை பரிணாமத்திலிருந்து துவக்குவோம். பரிணாமத்தைப் பொறுத்தவரை அறிவியலாருக்கும், ஆன்மிகத்தாருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம். உயிர் என்பது சிற்றுயிர்களிலிருந்து பேருயிர்களாகப் பரிணமிக்கின்றது. விலங்கினங்கள் எளிய, சிக்கலற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும் துன்பங்கள், துயரங்கள், கவலைகள் என்று அதிருப்தியான வாழ்க்கை வாழ்கின்றது. இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மனித இனம் ஆறாம் அறிவைப் பெற்ற ஒரே உயிரினம் என்று பெருமை பேசுகிறோம்; பரிணாமத்தில் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறோம். அப்படியிருக்க ஏன் இந்த துன்பமான, துயரமான வாழ்க்கை?
விலங்கினங்கள் நம்மை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றன. அவை இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. இயற்கையில் எப்படிக் கிடைக்கிறதோ அப்படியே உணவை உட்கொள்கின்றன. உணவை அவை மாற்றவோ, சீர்திருத்தவோ, ருசிகூட்டவோ முயல்வதில்லை. ஆனால் மனிதனோ தனது பரிணாம வளர்ச்சி பெற்ற புலன்களால் இயற்கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தனது தேவைக்காகவோ, ருசிக்காகவோ மாற்ற விரும்புகின்றான். சுருங்கச்சொன்னால் இயற்கையை வெல்ல மனிதன் விரும்புகின்றான். மனிதன் மாறுதல்களை விரும்புகின்றான். இவ்வாறாக, மனிதனது வாழ்க்கை முற்றிலும் செயற்கையாக மாறிக்கொண்டிருக்கிறது. உணவை எடுத்துக்கொண்டால், உணவை வேறு பொருட்களுடன் சேர்த்து, சமைத்து, நிலைமாற்றி தனது ருசிக்கேற்ப அல்லது தேவைக்கேற்ப உண்ண விரும்புகின்றான். இதனால் உணவுப் பொருட்களின் குணாதிசியங்கள் சமயத்தில் முற்றிலுமாக மாறிவிடுகின்றன. மூலப்பொருட்களில் இருந்த குணங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதுதான் மனிதனின் துன்பத்திற்கு மூல காரணமா?
பரிணாமத்தில் எல்லா உயிர்களுக்குமே புலன்கள், உள்ளுணர்வுகள், தேவைக்கேற்பவும், சுற்றுச்சூழலுக்கேற்பவும், காலத்திற்கேற்பவும் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றைஇயல்பாகவே பெற்றுள்ளன.
விலங்கினங்கள் இயல்பான, இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. வாழ்வை உள்ளபடி அவை எதிர்கொள்கின்றன. உணவைப் பொறுத்தவரை கிடைத்தவற்றை, எதையும் மாற்ற முயலாமல் அப்படியே உண்கின்றன. அவைகளுக்கு வியாதி என்பது சாதாரணமாக உண்டாவதில்லை. அப்படியே நோய்நொடி உண்டானாலும் தன்னை எப்படி குணப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவைகளுக்குத் தெரிந்திருக்கின்றது. அவை மருத்துவர்களையோ அல்லது வெளி உதவியையோ,பிறரது ஆலோசனையையோ நாடிச் செல்வதில்லை.
உலகின் பல்வேறு இடங்களிலும், பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த சான்றோரும், தத்துவ ஞானிகளும், மதத் தலைவர்களும் மனித வாழ்க்கைக்கு நிச்சயமான குறிக்கோள் இருக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். “உன்னையே நீ அறிவாய்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்த இலக்கை அடைய, மனிதனுக்கு ஆறாம் அறிவு தேவைப்பட்டது; அதனாலேயே பரிணாமம் நமக்கு ஆறாம் அறிவை வழங்கியுள்ளது. இந்த ஆறாம் அறிவால் உந்தப்பட்டு, மனிதன் எல்லாவற்றிலும் காரண காரியத்தைத் தேடுகிறான். இப்பேரண்டத்தில் ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் கண்டிப்பாக உண்டு என்று உணர்கிறான். மனிதனுக்கு பரிணாமம் செயலாற்றும் வல்லமைகொண்ட இரு கரங்களைத் தந்துள்ளது. தனது அறிவையும், கரங்களையும் கொண்டு மனிதன் நுட்பமான கருவிகள், உபகரணங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளான். இவற்றைக்கொண்டு தனது தேவைக்கான பல புதிய புதிய பொருட்களை உருவாக்கவும் செய்கிறான். இது அவனது ஆறாம் அறிவால் கிடைத்த பேறு அல்லது சிறப்பு. எனவே அவன் எல்லாவற்றையும் வெவ்வேறுவகையாக மாற்றிப்பார்த்தால் என்ன என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான்.
இந்நிலையில் நோய்நொடிகள் தவிர்க்க இயலாதவை. விலங்கினத்தைப் பொறுத்தவரையில் துன்பம் விளைவிப்பவை, தீங்கு விளைவிப்பவை ஆகியவற்றை தவிர்க்க அவைகளின் உள்ளுணர்வு வழிகாட்டுகின்றது. ஆனால் மனிதனுக்கு அவனது உள்ளுணர்வு வழிகாட்ட, எச்சரிக்க தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்:
1. ஆடுகள் ஊமத்தை, எருக்கு போன்றவற்றை தின்றாலும் அவைகளுக்கு ஊறு நேர்வதில்லை.
2. சில பூச்சிகளின் வாழ்க்கையில் லார்வா என்றொரு பருவம் வருகிறது. இப்பருவத்தில் அவைகளுக்கு பார்க்கும் சக்தி இருப்பதில்லை. எனினும் அவை தவிர்க்கவேண்டியவற்றை தவிர்த்து, வேண்டிய இலைதழைகளை மட்டும் உண்டு உயிர்வாழ்கின்றன.
3. சாதாரணமாக சமையலுப்பு, வெங்காயம், புளி, இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, மிளகாய் போன்றவற்றை மனிதன் அப்படியே உண்பதில்லை. ஆனால் அவற்றை வேறுவேறு அளவில், வேண்டிய இடங்களில் தேவைக்கேற்ப உணவுடன் சேர்த்து உண்கின்றன. அவ்வாறு செய்யும்போது சுவைகூடி, ஏற்புடையதாக உணவு மாறுகின்றது.
4. இன்றைய நவீன யுகத்தில், நம் வாழ்வில் நாம் பல இரசாயனப் பொருட்களையும், தாதுக்களையும், உலோகங்களையும் கையாள நேர்கிறது. இவற்றில் பல நம் உடலினுள் சென்று, அவற்றின் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன.
கிட்டத்தட்ட நாம் உட்கொள்ளும் அனைத்துப் பொருட்களுமே நம் உடலிலும், மனிதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை அனுபவரீதியாகப் பார்க்கிறோம். இத்தாக்கங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை; மாறுபடுகின்றன. மரபுக்கூறுகள், உடலமைப்பு, உணவின் தன்மை, குணங்கள், எண்ணங்கள், சுற்றுச்சூழல், காலம், செயல், எந்தக் கட்டத்தில் மனிதன் வாழ்கிறான், அவனது பழக்க வழக்கங்கள், தனித்தன்மைகள் போன்றவற்றால் மாறுபடுகின்றன.
ஹோமியோபதி மருத்துவத்தின் பதார்த்த குணா சிந்தாமணியைப் படித்தால் பொருட்களின் தாக்கங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம் என்ற உண்மை எளிதில் விளங்கும். இத்தாக்கங்களின் தன்மையும், அளவும் மாறுபடுகின்றது. எனவே காரண காரிய விளக்கம் என்பது சிக்கலாகிறது. மேலும் பல சமயங்களில் இத்தாக்கங்கள் எளிதில் காணக்கூடியவையாகவோ அல்லது உணரக்கூடியவையாகவோ இருப்பதில்லை.
இப்போது நமக்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன: மனித இனத்திற்கு துன்பம் என்பது தவிர்க்க முடியாததா? நம் பரிணாமத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா?
வல்லுனர்கள் இப்பேரண்டத்தில் நுட்பம், வரைமுறை, ஒன்றுக்கொன்று தொடர்பு (Pattern, Precision, Regularity) போன்றவற்றை எல்லாவற்றிலும் காண்கின்றனர். இது பரிணாமம் எவ்வளவு சரியாக, நேர்த்தியாகச் செல்கிறது; அதில் விபத்து என்றோ எதிர்பாராதது என்று எதையும் கூறுவதற்கில்லை என்ற பேருண்மையை உணர்த்துகிறது. இதை சிற்றுயிர்களிலும் விலங்கினத்திலும் கண்ணுறலாம். எனவே இது மனித இனத்திற்கும் பொருந்தாமலிருக்க காரணம் இல்லை. மேற்கண்ட இரண்டு வினாக்களுக்கும் பதில் “இல்லை” என்பதே.
மனிதனின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும்பரிணாமத்தைக் குறைகூறுவது என்பது சரியில்லை,முறையில்லை என்பது தெளிவாகிறது.
நோய்நொடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை, அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை பரிணாமம் வழங்காதிருக்க முடியாது. இந்த நோய் எதிர்ப்பாற்றலை மீறி நோய்வாய்ப்படும்போது எளிய முறையில் சீர் செய்துகொள்ள வழிமுறைகளையும், மருந்துகளையும் இயற்கை வழங்காதிருக்க முடியாது.
விலங்குகள் தங்கள் நோயநோடிகளுக்கு மருந்துதேடி யாரிடமும் செல்வதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். மனிதனுக்கும் இது பொருந்த வேண்டும். அப்படியானால், அப்படி மருந்தைத் தேர, ஏதாவது வழி தெரிகிறதா? எங்கே மருந்தைத் தேடுவது?
மனம், புத்தி, புலன்கள், உடற்கட்டு, திறமைகள் எப்படி எல்லாவற்றிலுமே மனிதன் விலங்குகளிடமிருந்து மாருபடுகிறான். மனிதனின் துன்பத்திற்கான காரணங்களும், நிவர்த்திகளும் அவனது புலன்களிலேயே இருக்க வேண்டும். முரண்பட்டுத் தத்துவத்தின்படி நோயின் காரணங்களும், அவற்றை குணப்படுத்தும் வழிகளும் – இரண்டுமே – ஐம்புலன்கள் அறிந்ததாக இருக்கவேண்டும். தன்னையறிதலிலும் ஐம்புலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒவ்வொரு உடல் உறுப்பும் இயற்கையின் பல சோதனைகளுக்குப் பின்னரே தேவை, நோக்கம், சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. எந்த உறுப்பும் அனாவசியம் என்றோ, தேவையில்லை என்றோ கூறமுடியாது. இங்கே சில உதாரன்களைப் பார்ப்போம்: மரங்கொத்திப் பறவைக்கு அதன் இரை தேடும் தேவைக்கேற்ப நீண்ட அலகு அமைந்துள்ளது. மீன்கொத்திப் பறவை தன இரையைத் தேடிக்கொள்ள ஆற்றல் மிக்க கண்களையும், செங்குத்தாகக் கீழே இறங்கி, இரையைப் பற்றி, செங்குத்தாக மேழெழும்பும் ஆற்றலையும் (Vertical Landing and Vertical Take-off) பெற்றுள்ளது. மீன்களுக்கு நீந்த ஏதுவான உடலமைப்பு உள்ளது. தவளைகள் நிலத்திலும், நீரிலும் வாழ்வன; அதற்கேற்ற உடலமைப்பை அவை பெற்றுள்ளன.
பெண் கங்காரு தன் குட்டியைச் சுமந்து செல்ல ஏற்றவாறு வயிற்றில் ஒரு பை போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதை இன்னும் சற்று ஆழமாகப் பாப்போம். கங்காரு ஒரு மம்மல் – அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தைச் சேர்ந்தது. அது மூன்றடி உயரம் வரை வளரும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவித் தாவி வேகமாக குதித்துச் செல்லும். எனவே, குட்டிக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கவேண்டும். இல்லையெனில், வயிற்றில் சுமக்கும் கரு சிதைந்துவிடும்; அல்லது தூக்கிச் செல்லும் குட்டிக்கு ஆபத்து நேரிடலாம். கண்காருக்குட்டி தனது முதல் ஆறு மாதங்களை தன் தாயின் வயிற்றிலுள்ள பையிலேயே கழிக்கிறது. பால் சுரக்கும் உறுப்பும் அந்தப் பையிலேயே அமைந்துள்ளது. எனவே வெளியே வராமலேயே தாயின் வெளிப்பக்கத்திலுள்ள அந்தப் பையிலிருந்தே குட்டி பால் குடிக்க முடியும். இயற்கை எவ்வளவு நேர்த்தியாக, பிரமிக்கும்படியாக செயல்பட்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
அடுத்து யானையை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு மம்மல்தான். அதன் வடிவமைப்பும் வித்தியாசமாக, சிறப்பாக இருப்பதைப் பார்க்கலாம். உயரமான, மிகக் கனத்த, மிகப் பெரிய உடலமைப்பு. நினைத்துப் பாருங்களேன்: எளிதில், நீட்ட, சுருக்க, மடிக்க, உறிஞ்சி வைத்துக்கொள்ள, ஏதுவான துதிக்கை மட்டும் இல்லையெனில் அது நீர் பருக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும்! இயற்கை யானையின் வடிவையும், தேவைகளுக்கும் ஏற்ப வேண்டிய உறுப்புகளை படைத்துள்ளது.
இப்போது மனிதனை எடுத்துக் கொள்வோம். நான்கு கால் பிராணிகளிடமிருந்து பரிணமித்தவன் மனிதன். படுக்கை வாட்டிலிருந்து, செங்குத்தாக நிமிர நிமிர , முன்னங்கால்கள் இரண்டும் முன்னங்கைகளாகின. இந்த மாற்றத்தில் மனிதனின் கரங்கள் இரண்டும் எளிதாக அவனது பிறப்புறுப்பை அடையமுடியும். தன் உள்ளங்கையை ஒரு கோப்பையைப்போல் ஆக்கிக்கொண்டு திரவப்பொருட்களை கையிலேந்தமுடியும். இதன் நோக்கம் என்ன?
தற்போது நாம் வேறு சில உயிரினங்களைப் பார்க்கலாம். சிங்கம், புலி, வரிக்குதிரை, குரங்கு, ஆடு, மாடு, ஓணான் போன்றவை தன் சிறுநீரைத் தானே பருகுகின்றன. மனிதனுக்கு உள்ளதுபோல் கோப்பை போன்ற உள்ளங்கை அமைப்பு இல்லாததால் அவை சிறுநீரை நேரடியாகவே சுவைக்கின்றன. குட்டி போட்டபின் குட்டியைச் சுற்றியுள்ள ஜவ்வை நாவினால் நக்கிச் சுவைக்கின்றன. குட்டி வெளிப்படுத்தும் சிறுநீரை அவை அருந்துகின்றன. தனது சிறுநீரை தானே நேரடியாக சுவைக்க இயலாத சில பிராணிகள் தனது இனத்தைச் சேர்ந்த மற்றவற்றின் சிறுநீரைச் சுவைக்கின்றன. நமக்கு இது விநோதமாகவோ, வித்தியாசமாகவோ படலாம். ஆனால் அவை இதை இயல்பாகச் செய்கின்றன. அவை தனது பிறப்பு உறுப்பையோ அல்லது தன் இனத்தின் மற்றையவற்றின் பிறப்புறுப்பையோ நுகர்கின்றன, சுவைக்கின்றன. நாய், ஆடு மாடு போன்றவற்றைக் கவனித்தால் இவ்வுண்மை புரியும். இது ஏன்?
எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை மூன்று: உயிர் வாழவும், வளரவும் தேவையான உணவு; வசிக்க உறைவிடம்; மற்றும் இனப்பெருக்கம். ஆனால் விலங்குகளைப்போல் மனிதன் சிறுநீரைப் பருகுவதில்லை. மனிதனின் உடலமைப்பு தன் சிறுநீரைத் தானே நேரே பருக ஏற்றதாக இல்லை. அவனது உள்ளுணர்வும் சிருநீரைப்பருக உந்துவதில்லை. மேலும், சிறுநீரை ஒரு கழிவாக மனிதன் கருதுவதாலும், அதன் மேல் ஒரு அருவருப்பு உண்டாகிவிட்டது.
தன் சிறுநீரைத் தானே பருகும் விலங்குகள் மனிதன் போல் நிறைய நோய் நொடிக்கு ஆளாவதில்லை. அப்படியெனில், சிறுநீரைப் பருகுவதற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளதா? உடல்நிலை சரியில்லாதபோதோ, காயடிப்பட்டபோதோ எருது தன் சிறுநீரை அடிக்கடி பருகுகிறது. சில தினங்களில் அவை உடல் மெலிய ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க, அதன் கழுத்தில் ஒரு உலோக அல்லது மரக்கட்டை வளையத்தை பொருத்துகின்றனர். இது அது தன் சிறுநீரை பருக முடியாமல் தடுக்கும். இன்றைக்கும் கிராமங்களில் இதைக் காணலாம். ஏன் அது தன் சிறுநீரை பருகுகிறது என்ற கேள்வி எழுகிறது. வலி, காயடிக்கப்பட்டதாலான அதிர்ச்சி அல்லது மற்ற உபாதைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவுமே இதைச் செய்கிறது. எனவே சிறுநீர் நோயநோடிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கவேண்டும்.
மற்ற விலங்குகளோடு சண்டையிடும்போது ஏற்பட்ட காயங்களையும், மற்ற உபாதைகளையும் தன் சிறுநீர் மூலம் சிற்றுயிர்கள் போக்கிக்கொள்வது அவற்றின் உள்ளுணர்வால். தன் குட்டிக்குத் தான் எப்படி உள்ளுணர்வால் பாலூட்டுகிறதோ அதைப்போல். எனவே மனிதனுக்கும் காயங்களையோ, உடல் உபாதைகளையோ, மற்ற நோயநோடிகலையோ போக்கிக் கொள்ள ஒரு வழி இருக்கவேண்டும்.
இக்கருத்தை மறுப்பவர்கள் கூறுவது, சிற்றுயிர்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பியுள்ளன; எனவே அவற்றிற்கு இது பொருந்தலாம். ஆனால் ஆறறிவு படைத்த, முன்னேற்றமடைந்த மனிதனுக்கு இது பொருந்தாது.
எவ்வுயிராயினும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியம் அடிப்படையான தேவை. மனிதனைத் தவிர அனைத்துயிர்களும் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளவும், நோய் வாய்ப்படும்போது குணப்படுத்திக் கொள்ளவும் தாமே வழி தேடிக் கொள்கின்றன. மனிதர்கள் நோயுறும்போது மற்றவரின் உதவியை நாடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் நோயை தானே போக்கிக் கொள்ள முடியும்.
உள்ளுணர்வால் உந்தப்பட்டு, கன்றுக்குட்டி தாயின் மாடு தேடி பால் குடிக்கிறது. ஆனால், மனித இனத்தில் தாய்தான் சேயின் குறிப்பறிந்து பாலூட்ட வேண்டும். குழந்தைக்கு அழ மட்டுமே தெரியும். தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும் உள்ளுணர்வு குழந்தையிடம் இல்லை. தாயுமே உள்ளுணர்வால் குழந்தைக்கு அமுதூட்டுவதில்லை. பட்டறிவினாலும், கற்றறிவினாலும் மட்டுமே அவள் செயல்படுகிறாள். அதேபோல், நோயநோடிக்கு மருந்து காண உள்ளுணர்வு உதவுவதில்லை.
விலங்குகள் (யானையைத் தவிர) நீரை நேரடியாகவே பருகுகின்றன. மனிதர்கள் நீர் பருக ஏதாவது ஒரு பாத்திரத்தை – டம்ளரை – பயன்படுத்துகின்றனர். ஆனால், தேவை வைக்கும்போது அவர்கள் தங்கள் கையினால் நீரையள்ளிப் பருக முடியும். சாதாரண நிலையில், கைகள் பிறப்புறுப்பின் அருகே நிலை பெறுகின்றன. எனவே சிறுநீரை கையில் எடுத்துப் பருகுவது என்பது எளிமையானது. அடிக்கடி நோயநோடிக்கு ஆளாகும் நைதனுக்கு அடிக்கடி சிறுநீர் பருகும் தேவை இருப்பதால் இவ்வாறு அமைந்திருக்கலாம்.
சிறுநீர் கழிவல்ல!
சற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானா? எந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.
அறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதிலுள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோ, அதுபோல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ, அதுபோல் சிறுநீரும்.
பிறக்குமுன்னரே சிறுநீர் சிகிச்சை!
தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுலர்ச்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்குமுன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.
சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள்
சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால், அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது. (குறிப்பு 4).
“தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.
மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.
மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால், நமது சுற்றுச்சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.
மேலும் நுண்ணுயிர்களால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. நோய் உண்டாக்குவதாகக் கூறப்படும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றியும், நமது எச்சளிலும், நமது உடலின் பல பகுதிகளிலும் எப்போதுமே இருக்கின்றன. ஆனால் அவற்றால் நாம் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை. எதிருயிர்களைப் பயன்படுத்தாத ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் உனானி மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன. அதேபோல் இயற்கை மருத்துவம், அக்குப்ரஷர், அக்குப்பஞ்சர், காந்த சிகிச்சை போன்றவற்றில் மொத்தமாகக் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்துதல் என்ற கோட்பாடே கிடையாது. இருப்பினும், அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.
பாலுறவு நோய்கள், சிறுநீர்ப் பாதை நோய்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்படவர்களின் சிறுநீரில் நிச்சயமாக
ஆளி விதைகள்
cotton flax
ஆளி விதை
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 530 kcal   2230 kJ
மாப்பொருள்28.88 g
சர்க்கரை  1.55 g
நார்ப்பொருள்  27.3 g
கொழுப்பு42.16 g
புரதம்18.29 g
தயமின்  1.644 mg126%
ரிபோஃபிளாவின்  0.161 mg11%
நியாசின்  3.08 mg21%
பான்டோதெனிக் அமிலம்  0.985 mg20%
உயிர்ச்சத்து பி6  0.473 mg36%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  0 μg0%
உயிர்ச்சத்து சி  0.6 mg1%
கால்சியம்  255 mg26%
இரும்பு  5.73 mg46%
மக்னீசியம்  392 mg106%
பாசுபரசு  642 mg92%
பொட்டாசியம்  813 mg17%
துத்தநாகம்  4.34 mg43%

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

Email :bksureshv@gmail.com

Click HereClick Hereசளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நோய்களும் நம்மை எளிதில் தாக்குகின்றன. இந்த நோய்களை நீக்கும் மருந்துகள் நம்வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். நம் வீட்டில் உள்ள மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம். உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சர்கரைத்துளசி.



சர்கரைத்துளசி.

1. மூலிகையின் பெயர் -: சர்கரைத்துளசி.

2. தாவரப்பெயர் -: STEVIA REBAUDIANA.

3 . தாவரக்குடும்பம் -: COMPOSITAE.


4. பயன்தரும் பாகங்கள் -: இலை மற்றும் தண்டு.

5. வேறு பெயர்கள் -: “HONEY-LEAF”, “SWEET LEAF”, “SWEET-HERB”. போன்றவை.

6. வளரியல்பு -: சர்கரைத்துளசியின் பிறப்பிடம் தென் அமரிக்கா. அங்கு இயற்கை விஞ்ஞானியான ANTONIO BERRONI என்பவர் 1887ல் இந்த சர்கரைத்துளசியைக் கண்டுபிடித்தார். பாராகுவே மற்றும் பிரேசில் அதிகமாக வளர்க்கப்பட்டது. பின் வட அமரிக்கா, தென் கலிப்போர்னியா மற்றும் மெக்சிகோவில் அதிகம் வளர்க்கப்பட்டது. பின் ஜப்பானில் கோடைகாலத்தில் 32F-35F சீதோஸ்ணத்தில் வளர்க்கப்பட்டது. பின் எல்லா நாட்டிற்கும் பறவிற்று. இதை விதை மூலமும் கட்டிங் மூலமும் இனப் பெருக்கம் செய்யப்பட்டது. முதிர்ந்த விதைகள் கருப்பாக மரக்கலரில் இருக்கும். இதன் முழைப்புத் திறன் மிகவும் குறைவு. சர்க்கரைத்தளசி 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியது. மண் பாதுகாப்பில் இதற்கு இயற்கை உரம், மக்கிய தொழு உரம் தான் இட வேண்டும் இது மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரக்கூடியது. இராசாயன உரம் இடக்கூடாது. இதன் ஆணிவேர் நன்கு ஆளமாகச் செல்லும். இலைகள் அதிகறிக்க நட்ட 3-4 வாரங்கழித்து கொழுந்துகளைக் கிள்ளி விட்டால் பக்கக் கிழைகள் அதிகறித்து இலைகள் அதிகமாக விடும். பூக்களை வெள்ளை நிறத்தில் இருக்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் விதைகள் உண்டாகும். இலைகள் இனிப்பாக இருக்கும். கலோரி கிடையாது. உலர்ந்த இலைகளைப் பொடியாகச் செய்தால் இனிப்பு அதிகமாக இருக்கும். வியாபார நோக்குடன் பயிரிட நிலத்தை நன்கு உழுது தொழு உரம் இட்டு 3-4 அடி அகல மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். உயரம் 4 அங்குலம் முதல் 6 அங்குல உயர்த்த வேண்டும் பின் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை இடைவெளி விட்டு நாற்றுக் களை நட வேண்டும், பின் தண்ணீர் விடவேண்டும். ஈரப்பதம் தொடர்ந்து இருக்க 3 அங்குலம் முதல் 6 அங்குல மூடாக்கு அமைக்க வேண்டும். பின் 2 வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் போது இலைகளைப் பறிப்பது சாலச் சிறந்தது. இலைகளை வெய்யிலில் 8 மணி நேரம் உலர வைத்து எடுத்துப் பதுகாக்க வேண்டும். முதிர்ந்த இலைகளைப் போடியாக அரைத்து எடுத்து கண்ணாடி குடுவைகளில் பாதுகாப்பார்கள்.

7. மருத்துவப் பயன்கள் -: சர்கரைத்துளசியின் இலைகள், தண்டுகள் சர்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன் படுத்திகிறார்கள். இதிலிருந்து மாத்திரைகள் செய்கிரார்கள், எண்ணெய் எடுக்கிறார்கள் பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன் படுத்துகிராகள். இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன் படுத்திகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது ‘பிளட் சுகர்,’ இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும். இதையையே ஜப்பானில் வயிற்று உப்பல், பல் வியாதிகளுக்குப் பயன் படுத்துகிறார்கள். இது ‘ஏண்டி பாக்டீரீயாவாகப்’ பயன் படுகிறது. இது சர்கரைக்கு மாற்றாக உள்ள ஒரு நல்ல மூலிகையாகும்.